#Breaking: கரூர் கல்லூரி மாணவி கடத்தல் விவகாரம்; அதிரடி காட்டிய போலீஸ்.. மாணவி மீட்பு, இளைஞர் உட்பட மூவர் கைது.!

கரூர் மாவட்டத்தில் உள்ள தான்தோன்றிமலை பகுதியில் வசித்து வரும் இளம்பெண், கரூரில் செயல்பட்டு வரும் அரசு கல்லூரியில் பயின்று வருகிறார். பி.ஏ துறையில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த பெண், தினமும் பொதுப்போக்குவரத்து பேருந்தில் பள்ளிக்குச் சென்று வருவது வழக்கம் என கூறப்படுகிறது.
பெண் கடத்தல்
இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல மாணவி கல்லூரிக்கு தனது தோழிகளுடன் வருகை தந்தார். அவர் பொன் நகர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, 600 மீட்டர் தொலைவில் இருக்கும் கல்லூரிக்கு நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அங்கு ஆம்னி வேனில் காத்திருந்த இளைஞர்கள் மூவர், பெண்ணை கடத்தி சென்றனர்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த தோழிகள் மற்றும் பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். முதற்கட்டமாக பெண்ணை ஒருதலையாக இளைஞர் ஒருவர் காதலித்து வந்ததாகவும், அவரே கடத்தலில் ஈடுபட்டார் எனவும் பெண்ணின் தோழிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: #Breaking: 15 வயது சிறுமி கூட்டுப்பாலியல் துன்புறுத்தல்.. கழுத்தறுத்து கொலை முயற்சி.. கரூரில் பயங்கரம்.!
காவல்துறை விசாரணை
இதன்பேரில் கடத்தப்பட்ட பெண்ணை மீட்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. இந்நிலையில், கடத்தப்பட்ட பெண்மணி குஜிலியாம்பாறை பகுதியில் உள்ள கிராமத்தில் இருப்பது உறுதி செய்யப்படவே, அதிகாரிகள் விரைந்து சென்று மாணவியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், கல்லூரி மாணவியை கடத்தியதாக நந்தகுமார், அவரின் இரண்டு நண்பர்கள் என 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மதியத்திற்கு மேல் இளைஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வீட்டு வாசலில் பாத்திரம் கழுவிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. விசிக நிர்வாகி கைது.!