கர்ப்பமாக்கி கைவிட்ட காதலன்.. அன்னையை தேடி ஓடி விபரீத முடிவெடுத்த இளம்பெண்.. கண்ணீரில் உறவினர்கள்.!



in-kerala-a-tamilnadu-cuddalore-girl-dies-by-suicide

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில், ம. கொளக்குடி கிராமம், எல்.இ.பி நகரில் வசித்து வருபவர் இளங்கோவன். இவரின் மனைவி மணிமேகலை. தம்பதிக்கு பூமிகா என்ற 24 வயதுடைய மகள் இருக்கிறார். 

இளங்கோவன் மறைந்துவிட்ட நிலையில், மணிமேகலை கேரளாவில் தங்கியிருந்து கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இதனால் பூமிகா தனது அண்ணா, அக்கா ஆகியோருடன் கிராமத்தில் வசித்து வருகிறார்.

காதலில் நெருக்கம்

பூமிகா, அதே பகுதியில் வசித்து வரும் 26 வயது வாலிபரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். காதலின் பெயரில் ஜோடி ஒருகட்டத்தில் நெருங்கி பழகி இருக்கிறது. இதனால் பூமிகா 5 மாத கர்ப்பிணியாகி இருக்கிறார். இதையும் படிங்க: காதலியின் தம்பியை கொன்று தற்கொலை செய்த 23 வயது இளைஞன்; திருமணத்துக்கு மறுத்ததால் விபரீதம்.!

KERALA

மனமுடைந்து தற்கொலை

இந்த விஷயம் குறித்து பூமிகா காதலனுக்கு தகவல் தெரிவித்து, தன்னை திருமணம் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். இந்த விசயத்துக்கு மறுப்பு தெரிவித்த பூமிகா, சில நாட்களுக்கு முன்னதாக கேரளாவில் வேலை பார்த்து வரும் அம்மாவின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: ஒவ்வொரு நாளும் நரகம்.. கணவனின் கொடுமையால் குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு.. கண்ணீர் சோகம்.!