மண் திருட்டு புகார்; அரசு ஊழியர் மீது சரமாரி தாக்குதல்.. கொலை முயற்சி.!



in Madurai Usilampatti Govt Employee Attacked 


மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவர் ஊராட்சி மன்ற செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரின் பகுதியில் தொடர் மண் திருட்டு தொடர்பான விஷயங்கள் நடந்துள்ளது.

இந்த செயலில் உள்ளூரைச் சேர்ந்த ராஜேஷ்குமார், அஜித் ஆகியோர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ராஜேஷ் மற்றும் அஜித்-க்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

madurai

மண் திருட்டு புகாரால் தாக்குதல்

இந்த புகாரை வாபஸ பெற வேண்டி சின்னசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்த அஜித், ராஜேஷ் வந்துள்ளனர். அப்போது, இருதரப்பு வாக்குவாதத்தில், சின்னசாமியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரை: இடத்தகராறில் விஏஒ வீடுபுகுந்து அம்மிக்கல் போட்டு கொலை; அரசு ஊழியருக்கே இப்படியா?

இதனால் காயமடைந்த சின்னசாமி, உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். மேலும், அவர் கொடுத்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை: நடத்தி வருகின்றனர்.
 

இதையும் படிங்க: தூக்கத்தில் இருந்த இளைஞரை எழுப்பி கொடூரமாக கொலை; சரமாரியாக வெட்டி பயங்கரம்...! மதுரையில் பகீர்.!