மதுரவாயல்: இ-பைக் தீப்பிடித்த விவகாரம்; தந்தை, கைக்குழந்தை அடுத்தடுத்து பலி.. தாய் உயிர் ஊசல்.!



 in Maduravoyal E Bike Fire Accident 2 Died 

சென்னையில் உள்ள மதுரவாயல், அன்னை இந்திரா, காந்தி நகரில் வசித்து வருபவர் கெளதம் (வயது 31). இவருக்கு திருமணம் முடிந்து மஞ்சு என்ற மனைவி (வயது 29) இருக்கிறார். தம்பதிகளுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.

தற்போது குழந்தை எழிலரசியுடன் தம்பதி வசித்து வருகிறார். கெளதம் தனது பயன்பாட்டுக்காக எலக்ட்ரிக் வாகனம் ஒன்றை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த வாரத்தில் இ-பைக்கை கெளதம் சார்ஜ் போட்டபோது, எதிர்பாராத விதமாக தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது.

maduravoyal

அடுத்தடுத்து மரணம்

இந்த விபத்தில் படுகாயமடைந்த தம்பதி மற்றும் கைக்குழந்தை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டனர். இதனிடையே, கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக குழந்தை எழிலரசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் படிங்க: Gold Price: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைவு, வெள்ளி விலை ரூ.2000 குறைவு.!

மருத்துவமனையில் தொடர்ந்து கெளதம், அவரின் மனைவி சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று கெளதம் உயிரிழந்தார். மனைவி தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
 

இதையும் படிங்க: Chennai News: மாணவி, பெண் பேராசிரியை-க்கு பாலியல் தொல்லை; பேராசிரியரை அடித்துநொறுக்கிய மாணவர்கள்.!