Namakkal: குடிக்க பணம் தராத அப்பா விறகுகட்டையால் அடித்துக்கொலை.. மகன் வெறிச்செயல்.!



in Namakkal a Man Killed Own Father 11 March 2025 

மதுபானம் வாங்க பணம் தராத தந்தையை, மகன் விறகுகட்டையால் அடித்துக்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனுர், அரூர், நத்தமேடு பகுதியில் வசித்து வருபவர் காராளன் (வயது 85). இவரின் மகன் முருகேசன் (வயது 50). 

இவர்கள் தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர். போதைக்கு அடிமையான முருகேசன், போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் ஆவார். 

இதையும் படிங்க: ரூ.50 இலட்சம் நஷ்டத்தால் சோகம். மனைவி, குழந்தைகள் மரணம்., கணவன் கடிதம் எழுதி வைத்து மாயம்.!

தந்தை அடித்துக்கொலை

தற்போது வீட்டில் அவர் தங்கியிருக்கும் நிலையில், முருகேசன் தனது தந்தையிடம் மதுபானம் அருந்த பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். காராளன் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

namakkal

இந்த விஷயத்தில் ஆத்திரமடைந்த முருகேசன், உறங்கிக்கொண்டு இருந்த தந்தையை கட்டையால் பலமாக தாக்கி இருக்கிறார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த காராளன், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த மோகனூர் காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து காராளனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்த காவல்துறையினர், சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க: தாய், இரண்டு குழந்தைகள் மரணம்..கடிதம் எழுதி வைத்து மாயமான கணவர்.. நாமக்கல்லில் சோகம்.!