15 ஆண்டுகளில் 9 குழந்தைகள்.. 10 வது பிரசவத்திற்கு தயாரான நாமக்கல் பெண்..!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மல்லசமுத்திரம், பெரிய கொல்லப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கோபி (வயது 40). இவர் கூலித் தொழிலாளி ஆவார். இவரின் மனைவி சங்கீதா (வயது 35). தம்பதிகளுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது.
திருமணத்தைத்தொடர்ந்து, சங்கீதா 9 முறை கர்ப்பமாக இருந்து, வீட்டிலேயே குழந்தைகளை பிரசவித்து வந்துள்ளார். இந்த 9 குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்துவிட்டது, ஒரு குழந்தை தத்துக்கொடுக்கப்பட்டது. எஞ்சியுள்ள 7 குழந்தைகளை தம்பதிகள் வளர்த்து வருகிறார்கள்.
10 வது குழந்தைக்கு தயார்
இதனிடையே, சங்கீதா 10 வது முறையாக கர்ப்பமான நிலையில், உடல்நிலையை காரணப்படுத்தி உறவினர்கள் கர்ப்பத்தை கலைக்க அறிவுறுத்தி இருக்கின்றனர். இதனால் மல்லசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கருக்கலைப்பு செய்ய சங்கீதா அனுமதியாகினார். பின் மனம் மாறியவர், மாத்திரைகளை உட்கொள்ளவில்லை.
இதையும் படிங்க: கந்துவட்டி தொல்லையால் காதல் திருமணம் செய்த நபர் மனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு தற்கொலை; கடிதத்தில் உருக்கமான தகவல்.!
கருகலைக்க மறுப்பு
இந்த விஷயம் தொடர்பாக மல்லசமுத்திரம் வட்டார அலுவலர் பிரசாந்த் காவல் நிலைகத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் மருத்துவர்களுக்கு சங்கீதா ஒத்துழைப்பு தரவில்லை.
சுகாதாரத்துறை அதிகாரிகள் சமரசம் செய்ய பேசியும் மறுத்துவிடவே, தற்போது 2 மாத கர்ப்பமாக இருக்கும் சங்கீதாவை அதிகாரிகள் பேசி சரி செய்ய முடிவெடுத்துள்ளனர். சங்கீதா 10 வது முறையாக குழந்தையை பெறுவதில் உறுதியாக இருப்பதால், அவருக்கு அதிகாரிகள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: மருத்துவமனை கழிவறையில் வாயில் நுரைதள்ளிய நிலையில் இளைஞர்; அதிர்ச்சி தகவல்.!