குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
அக்காவை வழியனுப்ப வந்த 2 வயது தம்பி, பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி.. தாய் கண்முன் பறிபோன உயிர்.!
பள்ளிப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 2 வயது சிறுவன் பலியான சோகம் பசும்பலூரில் நடந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பசும்பலூர் கிராமத்தில் வசித்து வருபவர் சிங்காரவேல். இவரது மனைவி சந்தியா. தம்பதிகளுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற முடிந்து, தற்போது மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.
அக்காவை வழியனுப்பிய தம்பி
முதல் குழந்தையான விசித்ரா (வயது 6), அங்குள்ள வி. களத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். தம்பதியின் மற்றொரு குழந்தை சண்முகவேலு (வயது 2). இன்று காலை விசித்ரா, தனது தாய் சந்தியா உதவியுடன் பள்ளி பேருந்தில் ஏற்றிவிட அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையும் படிங்க: அதிவேகத்தால் சோகம்.. சைக்கிளில் சென்ற 12ம் வகுப்பு மாணவி பேருந்து மோதி பலி.. சென்னையில் துயரம்.!
சக்கரத்தில் சிக்கி பலி
அப்போது, சண்முகவேலும் உடன் சென்றுள்ளார். இதனிடையே, விசித்திராவை பேருந்தில் ஏற்றிவிட்ட சமயத்தில், சண்முகவேல் பேருந்து சக்கரத்திற்கு அடியில் சென்று நின்றதாக தெரிய வருகிறது. இதனை ஓட்டுனரும், உதவியாளரும் கவனிக்காத நிலையில், சந்தியாவும் கவனிக்கவில்லை.
காவல்துறையினர் விசாரணை
சிறுமி விசித்ரா பேருந்துக்குள் சென்றதும், வாகன ஓட்டுனர் பேருந்தை இயக்கி இருக்கிறார். இதனால் சண்முகவேல் பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தேங்காய் பறிக்கும்போது சோகம்; மின்சாரம் தாக்கி பறிபோன உயிர்.. பதறவைக்கும் வீடியோ.!