"பாதுகாப்பே இல்ல" பள்ளி வளாகத்தில் 4 வயது சிறுமியை கடித்துக் குதறிய நாய்; பெற்றோர் கண்ணீர் குமுறல்.!



  in Ramanathapuram Paramakudi dog Bites 4 Year Old Girl in School Campus 

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, சரஸ்வதி நகர் பகுதியில் யாதவா மெட்ரிகுலேசன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று-வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ - மாணவிகள் பயின்று வருகிறார்கள். 

இதே பள்ளியில் எல்.கே.ஜி பயின்று வரும் 4 வயது சிறுமி ஜெயஷ்வினி ஒருவரை, சம்பவத்தன்று நாய் கடித்து இருக்கிறது. இதனால் கடுமையான காயங்களை எதிர்கொண்ட சிறுமி, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். 

பாதுகாப்பு ஏற்பாடு இல்லை

இந்த விஷயம் குறித்து நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது, அவர்கள் நேரம் சரியில்லாமல் இருந்தால் அப்படி நடக்கும் என அலட்சியமாக பதில் தெரிவித்துள்ளனர். நிர்வாகத்தின் சார்பில் உரிய பாதுகாப்பு ஏற்படுத்தவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. 

இதையும் படிங்க: #JustIN: இருசக்கர வாகனத்தின் மீது உரசிய லாரி.. நிலைதடுமாறி விழுந்ததில் கணவர் கண்முன் மனைவி பலி.!

இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது சோகம்

அதாவது, சம்பவத்தன்று சிறுமி இயற்கை உபாதையை கழிக்க தனியாக சென்றுள்ளார். அங்கு குழந்தை பராமரிக்கும் பணியாளர் உடன் செல்லவில்லை. இதனால் தனியாக வந்த சிறுமியை நாய் கடித்து இருக்கிறது.

சிறுமியை கடந்த 2 மாதத்திற்கு முன்பு மூக்கில் சாபிஸ் திணித்ததாக கூறி, அதற்காக சிகிச்சை பெற்று இருக்கிறார். பின் குழந்தையை தண்ணீரில் விளையாட அனுமதித்து, அதிக காய்ச்சல் நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால் தங்களின் மகளின் நிலைக்கு காரணமான பள்ளி நிர்வாகம் பதில் சொல்ல வேண்டும் என பெற்றோர் கோரிக்கை முன்வைக்கின்றனர். 

பெற்றோர் கண்ணீர் குமுறல்

இதையும் படிங்க: Watch: நெஞ்சமெல்லாம் பதறுதே.. நொடியில், அண்ணன் கண்முன் தங்கை தலைநசுங்கி மரணம்..!