#Breaking: இராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது.. சிங்கள கடற்படை மீண்டும் அட்டகாசம்.!



in Ramanathapuram Rameswaram Fishermen Captured by Sri Lanka Navy

 

14 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 14 பேர், இரண்டு மீன்பிடி விசைப்படகில் கடலுக்குள் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். 

இதையும் படிங்க: திருமணத்திற்கு முதல் நாள் கம்பி நீட்டிய மணமகன்.. பெண் வீட்டார் குமுறல்.!

அப்போது, இவர்கள் வடக்கு மன்னார் பகுதியில் இருந்தபோது, அங்கு இலங்கை கடற்படை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

ramanathapuram

14 பேர் கைது

அவர்கள் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, 14 பேரையும் கைது செய்து இரணைத்தீவு கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர். 

இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள செய்தியால், உள்ளூர் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படும் நிகழ்வுக்கு தீர்க்கமான முடிவுகளை மத்திய-மாநில அரசுகள் எடுத்து உதவிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

இதையும் படிங்க: #JustIN: அரசுப்பேருந்து மோதி பயங்கரம்; 5 மாத கைக்குழந்தை மரணம்.. பரமக்குடியில் சோகம்.!