துண்டான 3 விரல்கள்: பேருந்தின் ஜன்னல் வழியே கைகளை நீட்டியதால் பயங்கரம்.!



in Ranipet Walajapet Woman lost fingers 

 

அலட்சியமாக ஜன்னல் ஓரம் கைகளை வெளியே வைத்தபடி பயணித்த பெண்ணின் 3 விரல்கள் துண்டாகியது.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பகுதியில், ஆற்காடு - காவனூர் பகுதியைச் சேர்ந்த பெண்மணி தனலட்சுமி, பேருந்து ஒன்றில் தனது குழந்தையுடன் காஞ்சிபுரத்தில் உள்ள தாயின் வீட்டிற்கு பயணம் செய்துகொண்டு இருந்தார். 

இதையும் படிங்க: #Breaking: திருப்பதியில் நிக்கிறான், திருச்செந்தூரில் கத்துறான் - அமைச்சர் சேகர் பாபு பதில்.. அடைத்து வைக்கப்பட்ட பக்தர்கள்..!

ஜன்னல் வழியே கைகளை நீட்டியதால் சம்பவம்

இவர் பேருந்தில் பயணிக்கையில், கைகளை ஜன்னல் வெளியே வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பேருந்தை ஒட்டி பயணம் செய்ததில், ஜன்னல் வெளியே விரலை நீட்டிய பெண்ணின் 3 விரல்கள் துண்டாகியது.

Ranipet

பெண் மருத்துவமனையில் அனுமதி

இதனால் வலியில் அவர் அலறவே, உடனடியாக பேருந்து உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

பேருந்துகளில் பயணம் செய்யும்போது கரம், சிரம் புறம் நீட்டாதீர் என எச்சரிக்கை வாசகம் இருக்கும். பேருந்து ஓட்டுநர்களும் கண்ணாடி வழியே யாரேனும் கைகளை நீட்டி இருந்தால் கண்டிப்பார்கள். இதனிடையே தான் இந்த சோகம் நடந்துள்ளது.

இதையும் படிங்க: திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் ஆவேசம்.. பலமணிநேரம் அடைத்து வைக்கப்பட்டதால் கொந்தளிப்பு.!