வேனில் வாக்குவாதம்.. சிறுவனின் ஆத்திரத்தால் உயிரே போச்சு.. சேலத்தில் நடந்த சோகம்.!



in Salem Edappadi School Student Killed In Van 

 

இரண்டு மாணவர்களுக்கு இடையே எழுந்த வாக்குவாதத்தில், 14 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடியில், தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் வேன் ஒன்றில், சம்பவத்தன்று 25 மாணவ - மாணவியரை ஏற்றிக்கொண்டு, அவர்களை வீட்டில் கொண்டு சென்றுவிட ஆயத்தமானது. வேனை ரித்திக்குமார் (25) என்ற ஓட்டுனர் இயக்கி இருக்கிறார். 

இதையும் படிங்க: #Breaking: 14 வயது சிறுவன் அடித்துக்கொலை; பள்ளி பேருந்தில் நடந்த சண்டையில் விபரீதம்.! சேலத்தில் பயங்கரம்.!

இவர்களின் வாகனம் வெல்லாண்டி வலசு பகுதியில் சென்றபோது, வேனில் பயணம் செய்த ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

மாணவர் மரணம்

இந்த வாக்குவாதத்தில் கந்தகுரு என்ற மாணவரை, மற்றொரு மாணவர் வேனில் இருந்த கம்பியில் தள்ளிவிட்டு, கழுத்தை நெரித்து இருக்கிறார். இதனால் கந்தகுரு மயங்கி இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிற மாணவ-மாணவிகள் அலறியுள்ளனர்.

Salem

உடனடியாக வேன் ஓட்டுநர் மாணவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதி செய்தார். பின் சேலம் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட மாணவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த எடப்பாடி காவல்துறையினர், 14 வயது மாணவரை கொலை செய்த சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுவன் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதையும் படிங்க: சேலம்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; தற்காலிக ஆசிரியர் போக்ஸோவில் கைது.!