திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பெண்ணின் காதை அறுத்து கம்மல் திருட்டு; ஒரே வீட்டில் இரண்டு முறை கொள்ளை.. திருட்டுச் சம்பவத்தால் குடும்பமே அதிர்ச்சி.!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஓடுவான்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னையா. இவரின் மனைவி சரசு. இவர்கள் இருவரும் சம்பவத்தன்று வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்தனர். அச்சமயம் அங்கு வந்த மர்ம கும்பல், இருவரையும் கத்தி முனையில் மிரட்டியுள்ளது.
சின்னையாவை கொடூரமாக தாக்கிய கும்பலானது, அவரது மனைவி சரசுவின் காதில் இருந்த கம்மலை அறுத்துச் சென்றுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட இருவரும், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இன்று ஒரேநாளில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி.. தமிழ்நாட்டில் அடுத்தடுத்து சோகம்.. பருவமழை தொடங்கும் முன்னே பரிதாபம்.!
மருத்துவமனையில் சிகிச்சை
விரைந்து வந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். தற்போது சரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சரசுவின் வீட்டில் கடந்த 10 மாதங்களுக்கு முன்னதாகவே இதேபோல நடந்த திருட்டு சம்பவத்தில், அவரின் 10 சவரன் தாலி சங்கிலி, கொலுசு, ரூ.2 ஆயிரம் பணம் ஆகியவை பறித்து செல்லப்பட்டுள்ளது.
இதனிடையே, மீண்டும் அவரின் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் கம்மலை அறுத்து களவாடி சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: மானாமதுரை: ஆண் நண்பருடன் இருந்த பெண் ஐவர் கும்பலால் கற்பழிப்பு; 2 காமுகன்களுக்கு மாவுக்கட்டு.!