சிவகங்கை: ஓடஓட விரட்டி பயங்கரம்.. அரசு மருத்துவமனை வளாகம் அருகே இளைஞர் படுகொலை.!



in Sivagangai Tirupattur Youth Killed by Gang 

 

அரசு மருத்துவமனை வளாகத்திற்கு அருகே இளைஞர் கொலை செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், அரசு மருத்துவமனை பின்புற வாசல் பகுதியில், நேற்று இரவு 4 பேர் கொண்ட மர்ம நபர்களால் இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டப்பட்டார். இளைஞரின் முகம், கை, கால், தலை என வெட்டுக்காயத்தால் அவர் படுகாயமடைந்து அலறித்துடித்தார்.

இதையும் படிங்க: கள்ளச்சாராயம் குடிச்சவனுக்கு 10 இலட்சம் எங்களுக்கு 5 தானா? - மின்சாரம் தாக்கி மாணவர் பலி., உறவினர்கள் போர்க்கொடி.!

சத்தம் கேட்டு வந்த உள்ளூர் மக்கள், இளைஞரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். மேலும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, இளைஞர் உயிருக்கு போராடிய காரணத்தால், மேல் சிகிச்சைக்காக சிவகங்கை, அதனைத்தொடர்ந்து மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

sivagangai

உயிர் பறிபோனது

ஆனால், மதுரைக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் காவல்துறையினர் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், பலியானவர் திருப்பத்தூர் மின் நகர் பகுதியில் வசித்து வரும் மாணிக்கம் என்பவரின் மகன் சண்முகவேல் என்ற சண்முகம் (வயது 27) என தெரியவந்தது. 

அவரை 4 பேர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, காவல்துறையினர் கொலை செய்த மர்ம நபர்களுக்கு வலைவீசி இருக்கின்றனர். 
 

இதையும் படிங்க: சிவகங்கை: பள்ளியில் மின்சாரம் தாக்கி 14 வயது சிறுவன் மரணம்; தலைமை ஆசிரியர், ஆசிரியர் பணியிடைநீக்கம்.!