தமிழகத்தில் 1வது வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ஆல்பாஸ் என்பது வதந்தி.! பள்ளி கல்வித்துறை



In Tamil Nadu, it is rumored that Alpas is for grades 1-9

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பல வகுப்புகள் பொதுத்தேர்வு நடத்தப்படாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் கொரோனா தொற்று குறைந்ததும் கடந்த சில மாதங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இதனால், இந்த ஆண்டு வழங்கம்போல பொதுத்தேர்வுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புவரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.  

இந்தநிலையில், தமிழகத்திலும் தேர்வின்றி 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் தமிழகத்தில் தேர்வின்றி 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று பரவும் தகவல் தவறானது என்றும்,  9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டாயம் ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


மேலும் 1 -9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு திட்டமிட்டபடி மே 6-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என செய்தி வெளியான நிலையில், பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.