பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
ஆன்லைன் ரம்மியால் தொடரும் உயிர் பலி... பணத்தை இழந்த ஆட்டோ டிரைவர் தற்கொலை..!!
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடையின்றி நடந்து வருகிறது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்டத்தினால் தொடர்ந்து தற்கொலைகள் நடந்து வருகிறது. எனவே, ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே, ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து நிரந்தர சட்டத்திற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கிடையே அவசர சட்டம் காலாவதியானதால், ஆன்லைன் சூதாட்டங்கள் மீண்டும் தடையின்றி நடந்து வருகிறது. பொதுமக்களின் செல்போன்களுக்கு தொடர்ந்து விளம்பரங்கள் மற்றும் அழைப்புகள் வந்தவாறு உள்ளன.
இந்த அழைப்புகளை நம்பி அப்பாவி மக்கள் பணத்தை இழக்கின்றனர். இதனால் பல தற்கொலைகள் நடக்கிறது. ஆன்லைன் சூதாட்டங்களால் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று பல தரப்பினரும் எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மணலி கால் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பார்த்திபன் (26) ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்ததால் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். ஆன்லைன் ரம்மியால் ரூ.50 ஆயிரத்திற்கும் அதிகமாக பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார்.