வயல்வெளியில் ஆடு, மாடுகளை மேய்த்ததால் ஆத்திரம்: முதியவர் பீர் பாட்டிலால் குத்திக்கொலை.!



in Thanjavur Dalit Man Killed over Dispute 

விவசாய நிலத்தில் ஆடு-மாடுகளை மேய்த்தபோது உண்டான தகராறு கொலையில் முடிந்தது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அருமலைக்கோட்டை, ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வருபவர் அருணாச்சலம் (வயது 60). இவர் சில நாட்களுக்கு முன்னதாக அங்குள்ள வயல் பரப்பில் ஆடு, மாடுகளை மேய்த்து இருக்கிறார். 

இந்த விஷயம் குறித்து அருணாச்சலம் - அதே ஊரில் வசித்து வரும் சிலர் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை நேரத்தில், அருணாச்சலம் தனது மிதிவண்டியில் அருமலைக்கோட்டை - வடசேரி வாய்க்கால் மேலப்பாலம் பகுதியில் சென்றுகொண்டு இருந்தார். 

இதையும் படிங்க: 16 வயது சிறுமியை சவுக்குத்தோப்பில் பலாத்காரம் செய்த காதலன்.. நண்பனையும் அத்துமீற அனுமதித்த கொடுமை.!

thanjavur

பீர் பாட்டிலால் குத்திக்கொலை 

அச்சமயம், எதிர்திசையில் இருசக்கர வாகனத்தில் வந்த விவேக் (வயது 28) என்ற நாபா தகராறில் ஈடுபட்டு இருக்கிறார். இதன்போது ஆத்திரமடைந்த விவேக், தனது கைகளில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து, அருணாசலத்தின் தொடையில் குத்தி இருக்கிறார். 

தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த அருணாச்சலம், நிகழ்விடத்திலேயே அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த அம்மாபேட்டை காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணையைத்தொடர்ந்து விவேக் கைது செய்யப்பட்டார். 

சாதி பிரச்சனையில் முதியவர் அருணாச்சலம் கொலை செய்யப்பட்டதாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தினர் போராட்டம் 

இதையும் படிங்க: எமன் விடுப்பில் இருந்ததால் தப்பிய இளைஞர்; 2 பேருந்துக்கு நடுவே நசுங்கியும் உயிர்தப்பிய பகீர் காட்சிகள்.!