திருமணமான சில நாட்களில் விபரீதம்; புதுமணப்பெண் தற்கொலை.! 



in Theni a New Married Girl Dies by Suicide 

 

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, கதிர் நரசிங்கபுரம் பகுதியில் வசித்து வருபவர் பரமேஸ்வரன் (வயது 56). இவர் தேனி அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில், உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவரின் மகள் சௌமியா (வயது 24). இவர் பட்டப்படிப்பு பயின்றுவிட்டு, ஆண்டிபட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் வேலை பார்த்து வந்துள்ளார். கம்பம், புதுப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ராமச்சந்திரனின் மகன் பாலாஜி. 

இதையும் படிங்க: தாலிக்கயிறு ஏறிய சற்று நேரத்தில், தூக்கு கயிறு.. இளம்பெண்ணின் விபரீத முடிவு.!

Theni

மறுவீட்டில் நடந்த சோகம்

இவர்கள் இருவருக்கும் நேற்று முன்தினத்தில் கம்பம் நகரில் வைத்து திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர், மணமக்கள் மணப்பெண் வீட்டுக்கு மறுவீடு அழைத்து வரப்பட்டனர். 

நேற்று மாலை நேரத்தில் சுமார் 06:00 மணியளவில் கழிவறை செல்வதாக கூறிய சௌமியா, மீண்டும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், கதவை உடைத்து பார்த்தனர். 

அப்போது, சௌமியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. பின் இதுதொடர்பாக ராஜதானி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் புகாரை ஏற்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியால் சோகம்: பணத்தை இழந்த 25 வயது இளைஞர் தற்கொலை.!