ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
காதல் திரைப்படத்தை மிஞ்சிய தாலி அறுப்பு சம்பவம்.. பெட்ரோல் ஊற்றி அம்மாவையும் கட்டிப்பிடித்து கறார் காட்டிய மகள்.. பறிபோன உயிர்.!

ஆசை ஆசையாய் காதலித்து கரம்பிடித்த நபரின் தாலியை அம்மா அறுத்தெறிந்ததால், பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து அம்மாவையும் கட்டிப்பிடித்து மரணித்த பெண்ணின் காதல் போராட்டம் சோகத்தில் முடிந்த பின்னணியை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, இலங்கை தமிழர் முகாமில் வசித்து வருபவர் கணேசன். இவரின் மனைவி தமிழ் பிரியா. தம்பதிகளுக்கு 21 வயதுடைய பூஜா என்ற மகள் இருக்கிறார். திருவண்ணாமலை மாவட்டம் களம்பூரில், பூஜாவின் பெரியம்மா வீடு இருக்கிறது. அங்கு தங்கியிருந்தவாறு பூஜா வேலூரில் செயல்பட்டு வரும் கல்லூரியில், நர்சிங் பயின்று வந்தார்.
பெரியம்மா வீட்டுக்கு பக்கத்தில் வசித்து வந்தவர்கள் ராமகிருஷ்ணன் - சிவாஜினி தம்பதி. தம்பதிக்கு சரண்ராஜ் என்ற மகன் இருக்கிறார். இதனிடையே, இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது, பின்னாளில் காதலாக மாறி இருக்கிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காதல் ஜோடி வீட்டில் இருந்தும் வெளியேறி திருமணம் செய்துகொண்டது.
இதையும் படிங்க: மதுரை: இடத்தகராறில் விஏஒ வீடுபுகுந்து அம்மிக்கல் போட்டு கொலை; அரசு ஊழியருகே இப்படியா?
காதல் திருமணம்
மேலும், ஆரணி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்தது. அதிகாரிகளிடம் எங்களின் பிள்ளைகளுக்கு திருமணம் செய்கிறோம் என காவல் நிலையத்தில் கூறிய பெண் வீட்டார், காதல் திருமணம் செய்த ஜோடியை காரில் அழைத்துச் சென்றது. பின் வழியில் காரை நிறுத்திய பெண் வீட்டார், கூடுதலாக தங்கள் தரப்பு உறவினர்களை அழைத்தது வந்து பெண்ணை வீட்டுக்கு அழைத்துச்செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீக்குளித்து பெண் தற்கொலை
ஒருகட்டத்தில் காதல் திரைப்படம் போல, பூஜாவின் கழுத்தில் இருந்த தாலி, தாயால் அறுத்து எறியப்பட்டது. வீட்டுக்கு சென்ற பூஜா உறவினர்களிடம் வாக்குவாதம் செய்து, ஒருகட்டத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டார்.
மேலும், தாலியை அறுத்தெறிந்த தாயையும் கட்டிப்பிடித்து, தாலி அறுப்பு சம்பவத்துக்கு கைம்மாறு செய்து ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதனால் படுகாயமடைந்த இருவரில் பூஜா, மரண வாக்குமூலத்தை பதிவுசெய்தபின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட, அவரின் தாய் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தூக்கத்தில் இருந்த இளைஞரை எழுப்பி கொடூரமாக கொலை; சரமாரியாக வெட்டி பயங்கரம்...! மதுரையில் பகீர்.!