தூத்துக்குடி: சொத்து தகராறில் பயங்கரம்; முதியவர் அடித்தே கொலை!



in Thoothukudi a Aged Man Killed

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம், அலங்கிணறு காலனி தெருவில் வசித்து வருபவர் அந்தோணி ராஜ் (வயது 52). இவர் கட்டிட தொழிலாளி ஆவார். இவரின் சகோதரர் காசிவேல். 

அண்ணன் தம்பதிகள் இடையே தங்களின் பூர்வீக சொத்து தொடர்பான விஷயத்தில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனிடையே, நேற்று அந்தோணி, காசிவேல் வீட்டருகே சென்று கொண்டு இருந்தார்.

சொத்து தகராறு

அப்போது அவரை இடைமறித்த காசிவேல், அவரின் மகன் பரத் (வயது 19) உட்பட சிலர் சொத்து விஷயத்தில் தகராறு செய்து கட்டைகள் கொண்டு தாக்கி இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் அந்தோணிராஜ் படுகாயமடைந்தார்.

இதையும் படிங்க: பெட்ரோல் போட்ட அடுத்த நொடியே தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்; தூத்துக்குடியில் ஷாக்..!

Thoothukudi

அடித்துக்கொலை

இதனால் அவரை மீட்ட அக்கம்-பக்கத்தினர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அந்தோணிராஜ் உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்படவே, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், அந்தோணியை தாக்கி கொலை செய்ததாக காசிவேல், அருளம்மாள் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான பரத்துக்கு வலைவீசப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: தூத்துக்குடி: பீடை குடியால் குடும்பமே காலி.. கணவரை கொன்ற மனைவி.. தவிக்கும் 2 வயது குழந்தை..!