விஜய்டிவியில் விருவிருப்பாக ஒளிபரப்பாகும் இரண்டு தொடர்களின் நேரம் மாற்றம்! முழு விவரம் இதோ...
தூத்துக்குடி: வீடு ஜப்தியால் லாரி ஓட்டுநர் தற்கொலை; வல்லநாட்டில் இன்று கடையடைத்து மக்கள் போராட்டம்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வல்லநாடு, பெருமாள் கோவில் தெருவில் வசித்து வரும் சங்கரன் (வயது 45), தனக்கு சொந்தமான வீட்டை அடகுவைத்து, கடந்த 2020 ல் ரூ.5 இலட்சம் கடன் பெற்றுள்ளார். இதற்காக மாதம் ரூ.11 ஆயிரம் தவணையும் செலுத்தி வந்துள்ளார்.
கொரோனா காலத்திற்கு பின்னர் லாரி ஓட்டம் இல்லாத காரணத்தால், அதனை விற்பனை செய்துவிட்ட நிலையில், சில மாதமாக தவணை செலுத்த இயலாமல் தவித்துள்ளார். கடன் தவணை கேட்டு நிதி நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. மேலும், வீட்டினை ஜப்தி செய்ய நிதிநிறுவனம் நீதிமன்ற அனுமதி பெற்றுள்ளது.
ஜப்தி செய்த அதிகாரிகள்
சம்பவத்தன்று வீட்டை ஜப்தி செய்ய அதிகாரிகள் காவல்துறையினர் பாதுகாப்பு வந்தனர். வீட்டின் உட்புறம் 3 நாய்கள் அப்படியே வைக்கப்பட்டு வீடும் ஜப்தி செய்யப்பட்டது. வீடு ஜப்திக்கு எதிர்த்து மனமுடைந்த சங்கரன் (45), மனைவி பத்ரகாளி (43) ஆகியோர் விஷம் குடித்தனர்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு தயாரான புதுமாப்பிள்ளை தற்கொலை; உறவினர்கள் சோகம்.!
இவர்களில் சங்கரன் மருத்துவ சிகிச்சை உரிய நேரத்தில் கிடைக்காமல் துடிதுடித்து உயிரிழந்தார். 45 நிமிடம் பின்னரே அவசர ஊர்தி வந்தது. இதனால் சங்கரனின் உறவினர்கள் நிதிநிறுவன அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் நடத்தினர். மேலும், இன்று வல்லநாடு கிராமத்தில் கடையடைத்து எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: வீடு ஜப்தி நடவடிக்கையில் விபரீதம்; லாரி ஓட்டுநர் பூச்சி மருந்து குடித்து, உயிருக்கு போராடி மரணம்.!