மாமனார் - மாமியார் வெட்டிக்கொலை; திருநெல்வேலியை நடுங்க வைத்த இரட்டைக்கொலை.!



  in Tirunelveli VM Chatram Double Murder 20 Jan 2025 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வி.எம் சத்திரம், ஆரோக்கியநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் பாஸ்கர் (வயது 54). இவரின் மனைவி செல்வராணி (வயது 53). தம்பதிகளுக்கு ஜெனிபர் (வயது 30) என்ற மகள் இருக்கிறார். 

இதே பகுதியில் வசித்து வந்தவர் மரியகுமார். ஜெனிபர் - மரியகுமார் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறவே, இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். 

மாமனார் - மாமியார் வெட்டிக்கொலை

சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், ஜெனிபர் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், மனைவிக்கு வேறொரு நபருடன் காதல் ஏற்பட்டதாக மரியகுமார் சந்தேகித்து இருக்கிறார். 

இதையும் படிங்க: செல்போன் மாயமான தகராறில் பயங்கரம்; தொழிலாளி கழுத்தறுத்து கொலை.!

Murder

இதனால் ஆத்திரமடைந்த மரியகுமார் தனது மாமனார் - மாமியார் வீட்டிற்கு சென்று தகராறு செய்ய, பாஸ்கர், செல்வராணி ஆகியோர் மரியகுமாரால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மரியகுமாரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: #Breaking: காவலர் கண்முன் இளைஞர் வெட்டிக்கொலை? பெரம்பலூரில் பதற்றம்.. காவல் நிலையம் கண்ணாடி உடைப்பு.!