#Breaking: திருப்பூரில் முதிய தம்பதி கொல்லப்பட்ட விவகாரம்; பக்கத்து வீட்டில் வசித்தவர் கைது.. மாவுக்கட்டு?.!



in-tiruppur-avinashi-murder-case-accuse-arrested

 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி, ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் தனியாக வசித்து வந்த பழனிசாமி- பர்வதம் தம்பதி, மர்ம முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக இருந்தனர். இதுதொடர்பான வழக்கு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தம்பதி கொலை

தம்பதிகளின் பிள்ளைகள் வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், வீட்டில் தனியே வசித்து வந்த தம்பதி கொலை செய்யப்பட்டனர். ஏற்கனவே பல்லடம் அருகே முதிய தம்பதி, மகன் கொலை செய்யப்பட்ட விஷயத்தில் 100 நாட்கள் ஆகியும் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. மீண்டும் இக்கொலை சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. 

இதையும் படிங்க: #JustIN: "வருமுன் காப்பதும் இல்லை- பட்டும் திருந்துவது இல்லை" - எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்.!

Tiruppur

குற்றவாளி கைது

இந்நிலையில், முன்விரோதம் காரணமாக தம்பதி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக பக்கத்து வீட்டில் வசித்து வரும் ரமேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்தபோது, அவர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முற்பட்டார். 

அப்போது, அவர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்று, கை-கால்களில் எலும்பை முறித்துக்கொண்டார். இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டு இருக்கிறார். இந்த விஷயம் குறித்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிகிச்சைக்கு பின்னர் நடைபெறும் விசாரணையிலேயே முழுமையான தகவல் தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர். 

முதற்கட்டமாக முன்விரோதத்தில் முதிய தம்பதியை ரமேஷ் கொலை செய்தது உறுதியாகியுள்ளது.

 

இதையும் படிங்க: #Breaking: திருப்பூரில் மீண்டும் பயங்கரம்.. தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தம்பதி படுகொலை.!