ஆரணி: பள்ளிப்பேருந்தின் தறிகெட்ட வேகம்.. நொடியில் துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.. பதறவைக்கும் காட்சிகள்.! 



in Tiruvannamalai Arani Accident Man Died 

பள்ளிப்பேருந்தை இயக்கும் ஓட்டுனர்களின் செயல்பாடுகள் போட்டி-போட்டு பயணிக்கும் தனியார் பேருந்து ஓட்டுனர்களை காட்டிலும் அதிகம் இருக்கிறது. இதனால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிர்ப்பலி ஏற்படும் முன், அதனை அரசு கண்காணித்து தடுக்காத பட்சத்தில், இன்று சாலையில் செல்லும் நபரின் உயிர் பலியாகுவதைப்போல, நாளை எதிர்கால செல்வங்களான மாணவர்கள் விபத்தில் இழப்புகளை சந்திக்க நேரிடும் என்பதே விமர்சனம்.

அதிவேகத்தில் பள்ளி வாகனம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில், ஆரஞ்சு பிரிட்டிஷ் அகாடமி பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவிகளை தினமும் பள்ளிக்கு அழைத்து வந்து கொண்டு சென்றுவிட, சிறப்பு வாகனமும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, நேற்று முன்தினம் பள்ளியின் வாகனம் ஆரணி சாலையில் பயணித்தபோது, நசல் கூட்டுரோடு பகுதியில் வாகனம் சென்றது. வாகனத்தை சேகர் என்பவர் இயக்கினார். வழியில் இருசக்கர வாகனத்தில் அருணகிரிசத்திரம் பகுதியில் வசித்து வரும் மணிவண்ணன் சென்று கொண்டு இருந்தார். 

இதையும் படிங்க: SC வரக்கூடாது.. தவெக நிர்வாகிகள் நியமனத்தில் புகுந்த சாதி.. உழைத்தவர்கள் குமுறல்.!

Tiruvannamalai

தடுப்பு சுவரில் மோதி பலி

சாலையோரம் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகத்தில் வந்த பள்ளி வாகனம், நிலைதடுமாறி மோதியது. இந்த விபத்தில் மணிவண்ணன் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு, தடுப்பு சுவரில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், உயிரிழந்த மணிவண்ணனின் உடலை மீது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பள்ளி பேருந்து ஓட்டுநர் சேகரை கைது செய்தனர். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி சிசிடிவி கேமிரா காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன.

இதையும் படிங்க: காதல் தோல்வியால் விபரீதம்? விடுதியில் தூக்கில் தொங்கிய திருவண்ணாமலை மாணவர்.!