ஏரி நீரில் மூழ்கி சிறார்கள் இருவர் பலி.!



in Tiruvannamalai Chepat 2 Students Died 

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு, ஏனாதிமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் அருள்குமார். இவர் விவசாய கூலி வேலை செய்து வருபவர் ஆவார். அருளுக்கு மகன், மகள் இருக்கின்றனர். 

8 வயதாகும் மகன் பரத், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயின்று வருகிறார். மூன்றாம் வகுப்பு சிறுவன் படிக்கிறார். அருளின் உறவினரான ராஜா, சென்னையில் தங்கியிருந்து கூலி வேலை செய்கிறார். 

இதையும் படிங்க: நிலத்தகராறில் பயங்கரம்.. மூதாட்டி எரித்துக்கொலை.!

Tiruvannamalai

நீரில் மூழ்கி பலி

கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக அவர் குடும்பத்துடன் சொந்த ஊர் வந்தார். ராஜாவின் மகன் தேவன்ஷ் (வயது 4), நேற்று அருளின் மகன் பரத்துடன் பெரிய ஏரிக்கு சென்று இருக்கிறார். 

இருவரும் இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற நிலையில், பின் ஏரியில் இறங்கியதாக தெரியவருகிறது. அப்போது, இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: Tiruvannamalai: நர்சிங் கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்; 20 வயது இளைஞர் போக்ஸோவில் கைது.!