திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
18 வயதில் கொலை கேஸ்., 19ல் துள்ளத்துடிக்க படுகொலை.. திருச்சியில் நடுரோட்டில் சினிமா பாணியில் பயங்கரம்.. அலறிய பொதுமக்கள்.!
முன்விரோதம் காரணமாக இளைஞர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திண்டுக்கரை பகுதியில், விஷ்ணு என்ற இளைஞர் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது, 5 பேர் கும்பல் அவரை பேருந்தில் இருந்து இறக்கி, ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: 2 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்; தலைமறைவான அரசியல்கட்சி பிரமுகருக்கு காவல்துறை வலைவீச்சு.!
சினிமா பாணியில் எட்டி உதைத்து படுகொலை
முதற்கட்ட விசாரணையில், திருச்சி ஜீயபுரம், கொடியாலம், மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் நபர் கணபதி. இவரின் மகன் விஷ்ணு, ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இன்று சத்திரம் நோக்கி பேருந்தில் பயணம் செய்தபோது இந்த சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. பின்பக்க படிக்கட்டில் நின்றவரை, எட்டி உதைத்து கீழே தள்ளி 5 பேர் கும்பல் படுகொலையை நிகழ்த்தி இருக்கிறது.
இவர் முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரியவருகிறது. காலை சுமார் 09:30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால் பொதுமக்கள் பதறிப்போயினர். தடயவியல் நிபுணர்கள் குற்றவாளிகளின் மாதிரிகளை சேகரித்து வருகின்றனர்.
கொலை வழக்கில் கைதானவர் கொலை
கடந்த ஆண்டு கோகுல் என்பவர், அதே பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்த பெண் விஷ்ணுவின் உறவினர் என்பதால், அவர் தனது உறவினரான பெண்ணை கண்டித்த நிலையில், ஒருகட்டத்தில் கோகுல் படுகொலையும் செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் கோகுலும் ஈடுபட்டு இருந்த நிலையில், தற்போது அவர் கொல்லப்பட்டுள்ளார். 18 வயதில் கொலை செய்து, ஓராண்டுக்குள் ஜாமினில் வெளியே வந்த விஷ்ணு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் கோகுலின் கொலைக்கு பழிக்குப்பழி சம்பவமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
இதையும் படிங்க: திருச்சியில் கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்; அதிர்ச்சியில் மக்கள்.. காவல்துறை விளக்கம்.!