இருசக்கர வாகனம் -கார் மோதி பயங்கர விபத்து; 2 பேர் பலி.. போதை அலட்சியத்தால் சோகம்.!



in Trichy 2 Dies by Accident

திருச்சி மாவட்டத்தில் உள்ள வீரப்பூர், காட்டையாம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் சதிஷ் குமார் (34). இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

மறவனூரில் உள்ள சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாலா (வயது 32), மதன் பாபு. நேற்று முன்தினத்தில் சதிஷ், பாபு, மதன்பாபு ஆகியோர் மதுபானக்கடையில், மதுபானம் அருந்தி இருக்கின்றனர். பின் சதிஷின் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர்.

accident

அப்போது, சாலையை கவனிக்காமல் இருசக்கர வாகனத்தில் கடக்க முற்பட்டனர். அப்போது, திருச்சியில் இருந்து மணப்பாறை நோக்கி பயணம் செய்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து மூவரும் தூக்கி வீசப்பட்டன.

இதையும் படிங்க: ஊட்டி: டூவீலர்-லாரி நேருக்கு நேர் மோதி சோகம்; 18 வயது கல்லூரி மாணவர் பலி..!

சதிஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், பாலா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், மதன்பாபு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். 
 

இதையும் படிங்க: மதுரை: தனியார் பேருந்தின் அதிவேகத்தால் நேர்ந்த சோகம்; மூதாட்டி பலி, 15 பேர் படுகாயம்..!