மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேலூரில், தலைமை ஆசிரியர் கொடுத்த தண்டனையில்... சுருண்டு விழுந்து பலியான மாணவன்..!!
வேலூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு மாணவன், விளையாட்டு மைதானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழப்பு.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இன்று பிற்பகல் மூன்று மணியளவில் 9-ஆம் வகுப்புக்கு ஆசிரியர் யாரும் வராததால் மாணவர்கள் சத்தமாக பேசி, விளையாடிக்கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியர், மாணவர்களை கண்டித்ததுடன் சத்தம் போட்ட மாணவர்களை நான்கு முறை மைதானத்தை சுற்றி ஓடுமாறு தண்டனை கொடுத்துள்ளார். எனவே மாணவர்கள் மைதானத்தை சுற்றி ஓடினர். அப்போது திடீரென மோகன்ராஜ் என்ற மாணவன் மைதானத்தில் சுருண்டு விழுந்தான்.
சுருண்டு விழுந்த மோகன்ராஜை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவனது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இதுதொடர்பாக அணைக்கட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.