ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
செஞ்சி: துக்க வீட்டுக்கு வந்த கணவன்-மனைவி, மகளுக்கு அரசுப் பேருந்து வடிவில் வந்த எமன்; மூவரும் சம்பவ இடத்திலேயே பலி..!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, வல்லம், தொண்டி ஆற்றுப்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய குடும்பத்தினர் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையில் உள்ள மதுரவாயல் பகுதியில் வசித்து வருபவர் துரைக்கண்ணு. இவரின் மனைவி பச்சையம்மாள். தம்பதிகளுக்கு கோபிகா என்ற மகள் இருக்கிறார். மேஸ்திரியாக பணியாற்றி வரும் துரைக்கண்ணுவின் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி ஆகும்.
இதையும் படிங்க: சுற்றுலா சென்ற மாணவ-மாணவிகள் வாகனம் விபத்தில் சிக்கி அதிர்ச்சி.. 11 பேர் காயம்.!
செஞ்சியை அடுத்துள்ள ராஜாபுலியூர் கிராமத்தில், துரைக்கண்ணுவின் அண்ணன் நந்தகோபால் வசித்து வருகிறார். குடும்பத்துடன் வசித்து வந்த நந்தகோபால் இயற்கை எய்தினார். இந்த தகவல் துரைக்கண்ணுவுக்கு தெரிவிக்கப்பட்டது.
விபத்தில் சிக்கி சோகம்
இதனையடுத்து, அவர் சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் செஞ்சி வந்தார். வழியில் வல்லம், தொண்டி ஆற்றுப்பாலம் பகுதியில் வரும்போது, எதிர்திசையில் வந்த அரசுப்பேருந்து மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த மூவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த செஞ்சி காவல்துறையினர், மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: லாரி - இருசக்கர வாகனம் மோதி நேர்ந்த சோகம்; முதியவர் பரிதாப பலி.!