ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை, திருமண மிரட்டல்.. விஜய் கட்சி நிர்வாகியால் மாணவி தற்கொலை செய்து மரணம்.!

தவெக நிர்வாகியின் சர்ச்சை செயலால் மனமுடைந்துபோன சிறுமி தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, நரசிங்கராயன்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் தென்னன். இவரின் மகன் சரவணன் (வயது 25). இவர் செஞ்சி நகர தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இதையும் படிங்க: டூவீலர் - வேன் மோதி நேர்ந்த சோகம்; வாகன ஓட்டி, லிப்ட் கேட்டு பயணித்த திருநங்கை பலி.!
பாலியல் தொல்லை
இதனிடையே, சரவணன், அதே பகுதியில் வசித்து வரும் 13 வயது சிறுமி ஒருவரிடம், தன்னை நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கூறி, கடந்த 3 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனால் சிறுமி மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்த சூழலில், சம்பவத்தன்று தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த செஞ்சி காவல்துறையினர், போக்ஸோவில் சரவணனை கைது செய்தனர். மேலும், சகோதரரின் இவ்வாறான செயலை கண்டுக்காமல், அதற்கு உடந்தையாக இருந்த சங்கீதாவையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
இதையும் படிங்க: வேலைக்கு விண்ணப்பித்த பெண்ணிடம் ஆபாச பேச்சு: தனியார் நிறுவன ஊழியர் உட்பட இருவர் கைது.!