வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட மூதாட்டி; கயிறுகட்டி உயிரை காப்பாற்றிய பொதுமக்கள்.!



  in Viluppuram Tirukoilur old women rescued by Local Peoples 

பெஞ்சல் புயலின் தாக்கத்தால் விழுப்புரம் மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கெடிலம், தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆகிய ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப்படை விரைகிறது

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர், அரகண்டநல்லூர் பகுதியில் வெள்ளம் வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், மீட்பு படையினரின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: சிலேட்டில் எழுதி உதவிகேட்ட மக்கள்; அரகண்டநல்லூரில் பதறவைக்கும் சம்பவம்.! 

வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மூதாட்டி மீட்பு

இதனிடையே, திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த குப்பம்மாள் என்ற மூதாட்டி, வெள்ள நீரில் சிக்கி வீதிகளுக்கு நடுவே அடித்துச் செல்லப்பட்டார். அங்கிருந்த பொதுமக்கள் இதனை கவனித்த நிலையில், விரைந்து செயல்பட்டு கயிறுகட்டி குப்பம்மாளை மீட்டனர்.

இதையும் படிங்க: #Breaking: விழுப்புரம் - திண்டிவனம் இடையே இரயில் சேவை தொடங்கியது; இரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கம்.!