கணவனின் விபரீத எண்ணத்தால் மனைவி பலி., பிற உயிர்கள் ஊசல்.! கடன் தொல்லை கழுத்தை நெரித்ததால் சோகம்..!



in Virudhunagar Rajapalayam Near Village Sethur Family Suicide Attempt Due to Loan Issues 

உடல்நலக்குறைவால் நண்பர்களிடம் வாங்கிய கடன் கழுத்தை நெரித்த காரணத்தால், குடும்பத்துடன் தற்கொலை முயற்சி எடுத்ததில் மனைவி பலியாகினர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், சேத்தூர் பகுதியில் வசித்து வருபவர் கணேசன் (வயது 45). இவர் கூலித் தொழிலாளி ஆவார். இவரின் மனைவி முத்துமாரி. தம்பதிகளுக்கு 15 வயதுடைய குருபிரியா என்ற மகளும், சபரிநாதன் என்ற 13 வயதுடைய மகனும் இருக்கின்றனர். அக்கா-தம்பி இருவரும் அங்குள்ள பள்ளியில் பயின்று வந்தனர். 

கடன் நெருக்கடி

இதனிடையே, உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்ட கணேசன், மருத்துவ செலவுகளுக்காக நண்பர்கள், தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பின் தொடர் உடல்நலக்குறைவு காரணமாக வேலைக்கும் செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கடன் வாங்கியவர்கள், பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்திருக்கின்றனர். இந்த நெருக்கடி காரணமாக, நேற்று மாலை நேரத்தில் கணேசன் விபரீத முடிவெடுத்துள்ளார். 

இதையும் படிங்க: பவானியின் பவ்விய காதலில் சிக்கி, ஏமாற்றத்தால் இளைஞர் விபரீதம்..! வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைத்து சோகம்.!

suicide

உடல்நலக்குறைவுடன் அவதி;

தனது திட்டப்படி குழந்தைகள், மனைவி ஆகியோருக்கு பூச்சி மாத்திரைகளை கொடுத்தவர், தானும் அதனை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். இதில் சிறிது நேரத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு நால்வரும் அவதிப்பட்டுள்ளனர். இதனைக் கவனித்த அக்கம் பக்கத்தினர் தம்பதிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். 

ஒருவர் பலி., 3 பேர் கவலைக்கிடம்

அப்போது, அவர்களின் தற்கொலை முயற்சி அம்பலமாகவே, உடனடியாக அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அங்கு மருத்துவர்கள் முத்துமாரியின் மரணத்தை உறுதி செய்தனர். மேலும், உடல்நலக்குறைவுடன் அவதிப்பட்ட கணவர், மகன், மகள் ஆகியோருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விஷயம் குறித்து சேத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கணவனை இழந்த கைம்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்று தானும் தற்கொலை.. விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்.!