மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடிகார மகனை கட்டையால் அடித்துக்கொன்ற தந்தை உடல்நலக்குறைவால் மரணம்; அடுத்தடுத்து சோகம்.!
மகனின் சித்ரவதை தாங்காமல் கொலை செய்த தந்தையும் இறுதியில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் வசித்து வருபவர் ராமசாமி (வயது 74). இவர் ஓய்வுபெற்ற வேளாண்துறை ஊழியர் ஆவார். ராமசாமியின் மகன் சுப்பிரமணி. இவர் போதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொலை மிரட்டல்.!! 55 வயது கூலி தொழிலாளி தப்பியோட்டம்.!!
இதனால் சரிவர வேலைகளுக்கு செல்லாமல், தனது அன்றாட செலவு மற்றும் போதை செலவுக்கு, பெற்றோரிடம் மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். மேலும், தினமும் பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக ரூ.600 அளவில் பறித்துச் செல்வதாகவும் கூறப்படுகிறது.
வயது மூப்பால் சோகம்
பணத்தையும் வாங்கிவிட்டு செல்லும் சுப்பிரமணி, போதையில் வீட்டிற்கு வந்து மீண்டும் அவர்களிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். வயது மூப்பின் காரணமாக ஏற்கனவே ராமசாமிக்கு சர்க்கரை, இரத்த அழுத்த பிரச்சனை போன்றவை இருந்துள்ளது.
மகன் கொலை
இதனால் உடல்நலக்குறைவையும் எதிர்கொண்டு, மகனின் தொல்லையையும் தாங்காமல் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனிடையே, மகனை கொலை செய்ய முடியெடுத்தவர், அக்.01 ம் தேதி அன்று, வீட்டில் உறங்கிய மகன் சுப்பிரமணியை கட்டையால் அடித்துக் கொலை செய்தார்.
தந்தையும் உடல்நலக்குறைவால் மரணம்
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமசாமியை கைது செய்தனர். அவரின் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். இதனிடையே, இன்று காலை ராமசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: வீட்டில் தனியே இருந்த மூதாட்டி மர்ம கொலை; திருப்பத்தூரில் அதிர்ச்சி.!