ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
இப்படியும் ஒரு காதலா? இறப்பிலாவது ஒன்று சேர்வோம்...தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடிகள்.!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி கைலாசநாதர் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் ஜெயராமன்- பவுனம்மாள் தம்பதியரின் மூத்த மகன் ஜெயராமன். இவர் அதே பகுதியில் வசித்து வரும் முருகன் என்பவரின் மகள் யுவராணியை சிறு வயதில் இருந்தே காதலித்து வந்துள்ளனர்.
மேலும் யுவராணி ஓரளவுக்கு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். ஆனால் ஜெயராமனின் குடும்பத்தார் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வருபவர்கள். இந்நிலையில் ஜெயராமன் சென்னையில் உள்ள தனியார் தொழிற்சாலையிலும், யுவராணி மறைமலை நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையிலும் வேலை செய்து வந்துள்ளனர்.
இவர்களின் காதல் விவகாரம் யுவராணியின் தந்தை முருகனுக்கு தெரியவரவே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் யுவராணிக்கு வேறு ஒரு இடத்தில் திருமண நிச்சயதார்த்தம் செய்ய அவரது தந்தை முருகன் ஏற்பாடு செய்துள்ளார். இதனை அறிந்த யுவராணி வேலைக்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்னை சென்று ஜெயராமனை சந்தித்துள்ளார்.
மேலும் யுவராணி தனக்கு வீட்டில் வேறு ஒரு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்ற செய்தியை ஜெயராமனிடம் கூறவே பதறிப்போன ஜெயராமன் இனி நம்மை ஒன்றாக சேர்ந்து வாழ விடமாட்டார்கள் இறப்பிலாவது சேர்ந்து வாழ்வோம் என்று முடிவு எடுத்து இருவரும் ஜெயராமன் தங்கி இருந்த அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.