மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மது குடிக்க பணம் கொடுக்காததால் சீனியர் மாணவர்கள் செய்த செயல்.! முதலாமாண்டு மாணவருக்கு நேர்ந்த கொடுமை.!
கோவையில் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த ஒரு மாணவருக்கு மொட்டையடித்து, 7 மாணவர்கள் ராகிங் செய்திருக்கிறார்கள். கோவை அவிநாசி சாலையில், இருக்கின்ற ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த ஒரு மாணவரிடம் சீனியர் மாணவர்கள் மது குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளனர்.
ஆனால், இதற்கு அந்த முதலாமாண்டு மாணவர் ஆட்சேபனை தெரிவித்ததுடன், பணம் கொடுக்கவும் மறுத்துவிட்டார். ஆகவே அந்த முதலாமாண்டு மாணவருக்கு மொட்டையடித்து, சீனியர் மாணவர்கள் ராகிங் செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக, அறிந்து கொண்ட அந்த முதலாமாண்டு படித்து வந்த மாணவரின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் வழங்கினர்.
அந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இது குறித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு பிறகு வெங்கடேஷ், மணி, மாதவன் உள்ளிட்ட 7 மாணவர்களை அதிரடியாக காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். மேலும் இந்த விவகாரம் குறித்து, அந்த மாணவர்களிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.