'துணியில்லாம நடுரோட்ல நின்னேன்.' சித்தப்பு சரவணனின் மோசமான அனுபவம்.. கண்ணீர் விட்ட நடிகர்.!
மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட ஐ.டி ஊழியர்!, போலீஸ் தீவிர விசாரணை..!
மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை கொலை செய்துவிட்டு, கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் வசித்து வந்தவர் ஐ.டி ஊழியர் பிரகாஷ். இவருக்கு காயத்ரி என்ற மனைவியும், நித்யஸ்ரீ (13) மகளும், ஹரிஹரன் (8) மகனும் உள்ளனர்.
இந்நிலையில் ஐ.டி ஊழியர் பிரகாஷ் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை மரம் அறுக்கும் ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . இந்த சம்பவம் தொடர்பாக சங்கர்நகர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, நான்கு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் தொல்லையால் ஐ.டி. ஊழியர் பிரகாஷ் விபரீத முடிவு என முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் கொலைக்கான காரணங்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் .இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.