மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பரிதாபம்..பட்டாசு வெடித்து சிதரியதில் போதை ஆசாமி பலி.!
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் என்ற பகுதியில் கூலித் தொழிலாளி பாலாஜி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி அன்று பாலாஜி மதுபோதையில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது.
அப்போது போதையில் பாலாஜிக்கு பட்டாசின் திரியில் நெருப்பு வைக்க தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் போதை ஆசாமி கீழே உட்கார்ந்து பட்டாசின் திரியை கொளுத்தி விட்டு எழுந்து நிற்க முயற்சித்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அதே சமயம் பாலாஜி பற்ற வைத்த பட்டாசு வெடித்துள்ளது. இதனால் பாலாஜி முகம் மற்றும் கால்கள் கருகி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பாலாஜியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.