மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மறைந்த ஜெயலலிதாவின் சொத்துகள் யாருக்கு? அமைச்சர் ஜெயக்குமார் பதில்!
சென்னை காசிமேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம், கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட சொத்துகளுக்கு தாமே உரிமையாளர் என சசிகலா கூறியிருப்பது குறித்து கேட்கப்பட்டது.
நிருபர்களுக்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், நீதிமன்றத்தில் அந்த விவகாரம் இருப்பதாகவும், நீதிமன்றம்தான் அதுகுறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் பதிலளித்தார். மேலும் சூரிய கிரகணத்துடன் ஒப்பிட்டு, அமைச்சர் ஜெயக்குமார் திமுகவை விமர்சித்தார்.
சட்டம் ஒழுங்கிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இனி அது குறித்து ஸ்டாலின் பேசக்கூடாது. 13 ஆண்டுகளாக மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த திமுக, மக்களுக்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் என்று வந்தாலே திமுக மற்றும் அதன் தலைவருக்கு தானாகவே காய்ச்சல் வந்துவிடும் என நகைச்சுவையாக பேசினார். மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதி பெறுவதில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.