மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வந்தாரு... போனாரு... ரிப்பீட்டு...!! டிவியை ஆன் செய்தாலே ஆணழகன் ஸ்டாலின்தான்.! முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், அதிமுக வேட்பாளர்கள் சுறுசுறுப்பாக வீடுதோறும் சென்று ஜெயலலிதா மூலம் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம், பள்ளி குழந்தைகளுக்கான விலையில்லா உபகரணங்கள், மகளிருக்கான மானிய விலை ஸ்கூட்டர், இயற்கை பேரிடரின் போதான நிவாரணப் பணிகள், மகளிர் நீதிமன்றம் போன்றவற்றை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.
பூத் ஏஜெண்ட்டுகள் நம்பிக்கையானவர்களாக இருக்க வேண்டும். தேர்தல் முடிவுகள் வெளியாகி மறைமுக தேர்தலுக்கு 10 நாள் இடைவெளி இருப்பதால் தி.மு.க-வினர் கவுன்சிலர்களை விலைக்கு வாங்க முயல்வார்கள். கட்சியினர் விலை போனால் அது மன்னிக்க முடியாத குற்றம். திமுக ஆட்சியின் அவலநிலையை எடுத்து கூறி, நிறைவேற்றப்படாத திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும்.
பொங்கல் தொகுப்பு பெயரில் குப்பையைத்தான் கொடுத்தனர் .உள்ளாட்சியில் மகளிருக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு போன்ற அதிமுக திட்டங்களை மோசடி செய்து திமுக தனது திட்டமாக கூறி வருகிறது. தொலைக்காட்சியை திறந்தாலே ஆணழகன் மு.க.ஸ்டாலின்தான் வருகிறார். வந்தாரு... போனாரு.. ரிப்பீட்டு..... என்பதுபோல மு.க.ஸ்டாலின் படம்தான் மீண்டும் மீண்டும் வருகிறது.