மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கஜா புயலால் வாழ்க்கையை இழந்த மக்களுக்கு ஓர் அரிய வேலைவாய்ப்பு! திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் புதிய திட்டம்!
கஜா புயலில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், வேதாரண்யம் மற்றும் கடலோர மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் புதிய வேலைவாய்ப்பினை உருவாக்க திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
திருப்பூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஒளிவிளக்கு மற்றும் சேவாபாரதி தொண்டு நிறுவனங்களின் மூலம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச பயிற்சி அளித்து அவர்களை திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் வேலையில் அமர்த்தும் திட்டத்தினை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
கல்வித் தகுதி, முன் அனுபவம் தேவையில்லை
பணிகள்: தையல், குவாலிட்டி செக்கிங், பேக்கிங்
வயது வரம்பு: 18 முதல் 40 வரை
ஆண் பெண் இருபாலருக்கும் வேலைவாய்ப்பு மற்றும் தனித்தனி தங்குமிடம். பள்ளி படிப்பை இடையில் கைவிட்டவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுத வசதி ஏற்பாடு செய்யப்படும். மேலும் அவர்கள் விருப்பப்பட்டால் தொலைதூரக்கல்வி மூலம் பட்டப்படிப்பு படிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. பின்னர் அவர்களது கல்வி தகுதிக்கு ஏற்றார்போல் பணியில் அமர்த்தப்பட்டு சம்பள உயர்வும் அளிக்கப்படும்.
சலுகை விலையில் மூன்று வேளை உணவு, பயிற்சிக்குப் பின் அரசு விதிமுறைப்படி ரூ.7500-8500 வரை சம்பளம் மற்றும் நிரந்தர வேலைவாய்ப்பு. குறிப்பிட்ட இடைவெளியில் போனஸ் மற்றும் சம்பள உயர்வு வழங்கப்படும்.
குடும்பத்தில் குறைந்தது இரண்டு பேர் வேலைக்கு வருபவர்களுக்கு நிறுவனத்தின் அருகிலேயே வீட்டு வசதி இலவசமாக ஏற்பாடு செய்து தரப்படும்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் கிட்டதட்ட ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
சுந்தரேசன் (ஒளிவிளக்கு) - 9791266423
கன்னியப்பன் (சேவாபாரதி) - 9894211005
இச்செய்தியை கஜா புயலால் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்ட மக்களுக்கு பகிர்ந்து அவர்கள் பயனடைய உதவ கேட்டுக்கொள்கிறோம். மேலும் மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் விருப்பம் இருந்தால் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.