மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்து கட்டுரை எழுதிய பத்திரிக்கை ஆசிரியர் அதிரடி கைது!,, எச்சரித்து விடுவித்த போலீசார்..!



Journalist arrested for writing article on death of student Smt

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி குறித்த செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பினால் அந்த சமூக வலைதளம் நீக்கப்படும் என்றும், செய்தியை பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு அறம் என்ற பெயரில் ஆன்லைன் செய்தி நிறுவனம் நடத்தி வரும் பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் என்பவர் ஸ்ரீமதி மரணம் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஜாமினில் வெளியிட்டது குறித்தும், ஸ்ரீமதி எழுதியதாக வெளியிடப்பட்ட கடிதம் பொய்யானது மற்றும் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், சாவித்திரி கண்ணன் சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் நேற்று கள்ளக்குறிச்சி காவல்தூறையினரால் கைது செய்யப்பட்டு ஒலக்கூர் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணைக்கு பின்பு அவரை எச்சரித்த காவல்துறையினர், அவரது விருப்பப்படி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருஞான சம்மந்தம் என்பவருடன் ஜாமீனில் அனுப்பி வைத்தனர்.