#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#Breaking : நாங்குநேரி சாதிய வன்கொடுமை விவகாரம் : நீதிபதி கே.சந்துருவின் குழுவுக்கு புதிய உத்தரவு.!
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவன் மற்றும் மாணவனின் குடும்பத்தினர் சக மாணவர்களால் மிகக் கொடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மறக்க முடியாதது. இளைய சமுதாயத்தினரிடம் இத்தகைய சாதி, இன உணர்வு புரையோடு இருப்பது சமூகத்தின் நலனிற்கு மிகப்பெரிய பிரச்சனை என்பதால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்க நீதி அரசர் கே.சந்துரு தலைமையில் ஒரு குழுவை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள்,சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகையாளர்கள் என்ற பல்வேறு தரப்பிடம் இருந்து கருத்துக்களை பெற்று அதன் அடிப்படையில் அரசுக்கு சந்துருவின் குழு அறிக்கை சமர்ப்பிக்க இருக்கிறது. நாங்குநேரி சென்று பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான அறிக்கை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் இந்த ஆய்வு முடிவுக்கு வரவில்லை. எனவே, இந்த ஆய்வு முடிவுகளை சமர்ப்பிக்க நீதிபதி சந்துருவுக்கு மே 31ஆம் தேதி வரை பதவி காலத்தை நீட்டிட்டு தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.