53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
அண்ணாமலைக்கு ஆதரவாக கலா மாஸ்டர் பிரச்சாரம்.! நடு ரோட்டில் போட்ட செம குத்தாட்டம்.! வைரல் வீடியோ!!
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்கு ஆதரவாக திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
கோவை லோக்சபா தொகுதியில், பாஜக மாநில தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியுமான அண்ணாமலை போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக டான்ஸ் மாஸ்டர் கலா நடனமாடி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அவர் கோவை வடவள்ளி பகுதியில் அமைந்துள்ள இந்திரா நகர், எம்.ஜி.ஆர் வீதி, கருப்பராயன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் பாஜக வேட்பாளரான அண்ணாமலையை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
வீடு வீடாக சென்று, நோட்டீஸ் விநியோகம் செய்து வாக்கு சேகரித்த அவர் மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் குத்தாட்டம் போட்டுள்ளார். இதனைக் கண்டு மக்கள் மற்றும் பாஜக கட்சியினரும் உற்சாகமடைந்து உடன் ஆடியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அண்ணாமலைக்கு ஆதரவாக டான்ஸ் மாஸ்டர் கலா பிரசாரம்: நடு ரோட்டில் குத்து டான்ஸ் - வீடியோ pic.twitter.com/RUgG88Hw78
— Indian Express Tamil (@IeTamil) April 7, 2024