கள்ளக்குறிச்சி கலவரம்!. விசாரிக்க மேலும் 3 குழுக்கள்; 55 அதிகாரிகள் நியமனம்: கடுமை காட்டும் டி.ஜி.பி..!



Kallakurichi riots 3 more teams of 55 officers appointed to investigate

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், கடந்த கடந்த 17 ஆம் தேதி நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் பள்ளி சூறையாடப்பட்டது. அங்கிருந்த பள்ளியின் பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

இதில் மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி காவல்துறையினரும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினரும், சமூக வலைதளங்கள் மூலம் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் பற்றி சைபர் கிரைம் அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக விசாரிக்கும் புலனாய்வு பிரிவில் மேலும் 55 போலீசாரை நியமனம் செய்து டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

கடலூர், வேலூர், சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த 12 காவல் நிலைய ஆய்வாளர்கள் உள்ளிட்ட 55 பேர் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் சரக டி.ஐ.ஜி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள புலனாய்வு பிரிவில் உள்ள 18 அதிகாரிகளின் கீழ் இவர்கள் பணியாற்றுவார்கள் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 55 பேரும் கலவரம் நடந்தது தொடர்பாக 3 பிரிவுகளாக பிரிந்து பணியாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.