காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் உடலை பெறுவார்களா? மர்ம மரணத்தின் முடிச்சு அவிழுமா?.! உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு விசாரணை..!!
கள்ளக்குறிச்சி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற இருக்கிறது.
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென மாணவி மூன்றாவது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இதனை ஏற்றுக் கொள்ளாத பெற்றோர் மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்த நிலையில், இது குறித்து புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரை தொடர்ந்து பெற்றோர் தரப்பில் இருந்து மூன்று நாட்களுக்கு மேல் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், எவ்வித பலனும் இல்லாததால் போராட்டம் கைவிடப்பட்டது. பின் சில மாணவர்களின் செயலால் மற்றுமொரு போராட்டம் நடத்தப்பட்டு, அது கலவரமானது. இதனை தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து வரும் நிலையில், மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இதற்கு நீதிமன்றமும் அனுமதியளித்து, பிரேத பரிசோதனையில் பெற்றோர்களும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்தது. ஆனால் மறுபிரேத பரிசோதனையில் மாணவியின் தரப்பில் இருந்து பெற்றோர் வராததால், அவர்களது வீட்டில் நோட்டீஸ் ஓட்டப்பட்டு மறுபிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் பின் மாணவியின் உடலை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நீதிமன்ற தரப்பில் தெரிவித்தும், பெற்றோர் உடலை வாங்காததால் நேற்று மீண்டும் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிமன்றம் உத்தரவிட்டும் மாணவியின் உடலை பெற்றோர் வாங்க வரவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவின்படி தான் அனைத்து நடைமுறைகளும் நடைபெற்றது என்றும் அரசு தரப்பில் வாதிட்டனர். ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவில் தங்களுக்கு சாதமாகமான தீர்ப்பு இருப்பதாக மனுதாரரான மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும், வழக்கறிஞர் இல்லாமலேயே மறு உடற்கூறாய்வு நடைபெற்றது என்றும், தேவைப்பட்டால் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளதால் வழக்கை முடிக்ககூடாது என்று வாதிட்டார். உச்சநீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்த நீதிபதி சதீஷ்குமார், முன்பே தான் பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யப்போவதில்லை என்று கூறி இன்று காலை 10:30 மணிக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.
அத்துடன் பெற்றோர் இன்று மாணவியின் உடலை பெற்றுக் கொள்வார்களா? அல்லது உச்சநீதிமன்றத்திற்கு வழக்கானது சென்று வேறு விதத்தில் நடைபெறுமா? என இன்று விசாரிக்கும் விதத்தை பொறுத்து தெரியவரும். இதற்கிடையில் மக்கள் அனைவரும் மாணவியின் மறுபிரேத பரிசோதனையில் என்ன உண்மை வெளியே வரும்? என்றும், மர்ம மரணத்தின் முடிச்சு அவிழுமா? என்றும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.