53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
தகராறில் சிறைக்குச்சென்று பழிவாங்கிய பயங்கரம்; ஓடஓட விரட்டி நடுநடுங்கவைக்கும் சம்பவம்.!
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், திருமுடிவாக்கம், கம்பர் தெருவில் வசித்து வருபவர் நிஷாந்த் (வயது 23). இவர் லோடு ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவில் வீட்டிற்கு முன்பு இருந்தபோது, அங்கு வந்த ஐவர் கும்பல் நிஷாந்தை வெட்டிக்கொலை செய்தது. அவர்களிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்றும், ஓடஓட விரட்டி படுகொலை நடந்தது.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த குன்றத்தூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், நிஷாந்துக்கும் - அப்பகுதியை சேர்ந்த அஜித் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இருதரப்பு மோதல் நடந்துள்ளது.
இந்த விவகாரத்தில் அஜித் தரப்பு சிறைக்கு செல்ல, வெளியில் வந்து பழிவாங்கும் படத்தில் கொலை சம்பவம் நடந்துள்ளது உறுதியாகியுள்ளது. இந்த விஷயம் குறித்து தனிப்படை அமைத்து 5 பேரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.