மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குளத்தில் மண்ணைக்கொட்டி ஆக்கிரமிப்பு.. பூந்தமல்லி அருகே பகீர் சம்பவம்... அதிர்ந்துபோன அதிகாரிகள்.!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி, அகரம்மேல் ஊராட்சியில் மூக்குத்திக்குளம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மர்ம கும்பல் குளத்தை மணலால் மூடி ஆக்கிரமிப்பு செய்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மூக்குத்திக்குளத்தை காணவில்லை என்று அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்தனர்.
மேலும், அமைச்சர் சா.மு நாசர், பூந்தமல்லி எம்.எல்.ஏ ஆ. கிருஷ்ணசாமி ஆகியோரிடமும் கிராம மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து, மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜி ரவி, வட்டார அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான அதிகாரிகள் குளத்தை ஆய்வு செய்தனர்.
அப்போது, குளம் முழுவதுமே மணலால் மூடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் பேரதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் ஜே.சி.பி இயந்திரம் உதவியுடன் மணலை அகற்றி குளத்தை மீட்டனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளத்தின் மதிப்பு ரூ.5 கோடி ஆகும். அதிகாரிகளின் விரைவான செயலால் மக்கள் இன்புற்றனர்.