ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
#JustIN: ரௌடி வசூல் ராஜா கொலை வழக்கு; கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேர் கைது.. 4 பேருக்கு மாவுக்கட்டு.!

ஏ+ ரௌடி லிஸ்டில் இருந்தவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கல்லூரி மாணவர்கள் ஐவர் உட்பட 10 பேர் கைது செய்யப்ட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சீட்டுக்கட்டு விளையாடச் சென்ற இடத்தில் வட்டி கேட்டு தகராறு; ரௌடி கொலை.!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்காலிமேடு பகுதியில் வசித்து வருபவர் வசூல் ராஜா. கொலை, கொலை முயற்சி, ஆட்கடத்தல் என 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் இவரின் பெயரில் நிலுவையில் இருக்கின்றன. உள்ளூரில் ரௌடியாக இருக்கிறார்.
சம்பவத்தன்று விஷ்ணுகாஞ்சிப்புரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், ரேஷன் கடை அருகில் நின்றுகொண்டு இருந்த ராஜா மீது, அவரை நோட்டமிட்டு வந்த மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். குற்றவாளிகளுக்கு தனிப்படை வலைவீசியது.
கை-கால் எலும்பு முறிவு
இந்நிலையில், கல்லூரி இளைஞர்கள் கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருந்தனர். 40 பேரிடம் விசாரணை நடந்து, 10 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை கைது செய்ய முயன்ற நடவடிக்கையின்போது, தப்பிச் செல்ல முயன்றவர்கள் 20 அடி உயரத்தில் இருந்து குதித்து கை-கால்களை முறித்துக்கொண்டுள்ளனர்.
2 பேருக்கு கை, 2 பேருக்கு கால் பகுதியில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் விசாரணைக்கு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: #Breaking: பிரபல ரௌடி குறுந்தையன் 2 பேர் கும்பலால் வெட்டிக்கொலை; பழிக்குப்பழியாக பயங்கரம்.. தஞ்சாவூரில் பரபரப்பு.!