53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
கனிமொழி எம்.பி. யின் கணவருக்கு உடல்நல குறைவு; உடனடியாக சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்..!!
திமுக எம்.பி. கனிமொழியின் கணவர் அரவிந்தனுக்கு, உடல்நல குறைவு ஏற்பட்டதால் உடனடியாக சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகளான கனிமொழி தூத்துக்குடி தொகுதியின் தி.மு.க. எம்.பி.யாக உள்ளார். இவருடைய கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். அரவிந்தனுக்கு சில தினங்களுக்கு முன்பு நுரையீரலில் தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, கனிமொழி உடனடியாக சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றார். அரவிந்தனின் உடல்நிலை வேகமாக முன்னேறி வருவதாகவும், அடுத்த சில நாட்களில் அவர் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரவிந்தனின் உடல்நிலை குறித்து கனிமொழியிடம் அவ்வப்போது விசாரித்து வருகிறார்.