மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கிறிஸ்துவ தேவாலயத்திற்குள் புகுந்து இந்து முன்னணியினர் ரகளை; கன்னியாகுமரியில் பரபரப்பு.!
தேவாலயத்திற்குள் பிரார்த்தனை நடக்கும் போது இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புத்தளம், உசரவிளை பகுதியில் கிறிஸ்துவ தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் ஜெபசிங், வீரபாகு ஆகியோர் கிறித்துவ கூட்டம் நடத்தினர்.
தேவாலயத்திற்குள் கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணி அமைப்பினர், கூட்டம் நடைபெறும் போதே இந்து முன்னணி கொடியுடன் சென்று ரகளை செய்தனர்.
பெருமாள்விளையை சார்ந்த சுரேஷ், மார்த்தாண்டன் உட்பட 8 பேர் ரகளை செய்யவே, தகவல் அறிந்து வந்த சுசீந்திரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இந்து முன்னணி ஒன்றிய பொருளாளர் சுரேஷை கைது செய்தனர்.