தீடீரென உள்வாங்கிய கடல்.. அதிர்ந்துபோன சுற்றுலாப்பயணிகள்.. என்ன நடந்தது தெரியுமா?.!



Kanyakumari Sea Level Today Decreased due to Weather Condition

கடந்த 2004 ஆம் வருடம் ஏற்பட்ட சுனாமிக்கு பின்னர் கன்னியாகுமரி கடலில் அவ்வப்போது சில மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. கடல் நீர் உள்வாங்குவது, உயர்வது, கடல் சீற்றம், திடீர் கொந்தளிப்பு, அலைகளே இல்லாமல் குளம் போல இருப்பது, கடலின் நிறம் மாறுவது என பல நிகழ்வுகள் நடந்து வருகிறது. 

சமீபத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், கன்னியாகுமரியில் 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கடல் நீர்மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. 

kanyakumari

கன்னியாகுமரி பகுதியில் கடல் நீர்மட்டம் திடீரென தாழ்ந்து உள்வாங்கவே, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் லேசான அச்சத்திற்கு உள்ளாகினர். நேற்றும், இன்றும் என 2 நாட்கள் நீர்மட்டம் உள்வாங்கியுள்ளது. இதனால் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தது. 

இதனைக்கண்ட சுற்றுலாப்பயணிகள் கடலில் இறங்கி குளிக்க அச்சப்பட்டாலும், சிலர் கடலுக்குள் சென்று பாறைகளுடன் புகைப்படம் எடுப்பது என இருந்தனர். இந்த செயலை கண்ட கடலோர காவல் துறையினர், ஆழமான பகுதிக்கு சென்ற சுற்றுலாப்பயணிகளை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.